phone: +94779009595
e-mail: pursuittvmovie@gmail.com
  • .
round minus
round plus

Pursuit - Tv Movie


வணக்கம்! 


Pursuit TV Movie 


Pursuit இலங்கையில் இருந்து வெளிவரவிருக்கும் ஒரு அறிவியல் - த்ரில்லர் குறுந்திரைப்படம். இது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான செலவாக இலங்கை ரூபாய் 1.5 லட்சம் அனுமானிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தை நிறைவேற்ற ஆர்வலர்கள், நலன் விரும்பிகளான தங்களிடமிருந்து சிறு சிறு தொகையாக நன்கொடைகளைப் பெற்று படத் தயாரிப்பை நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளோம். இப்படிமுறையானது Crowd Funding என்றழைக்கப்படும். பல்வேறு நாடுகளில் மிகச் சிறப்பாக வளர்ந்து வரும் இம்முறையால் பல சுதந்திர திரைப்படங்கள் (Independent Films) உருவாகி வெளியிடப்பட்டுள்ளன. இந்த Crowd Funding முறை இலங்கையில் முதற் தடவையாக செயற்படுத்தப்படுகிறது என்பதை கூறிக்கொள்ள விழைகிறோம். சமீபத்தில் கன்னடத்தில் வெளியான லூசியா திரைப்படமும் பல ஆர்வலர்களின் சிறிய அளவிலான தொகைகளிலேயே சாத்தியப்படுத்தப்பட்டது அனைவரும் அறிந்த விடயமே. 

எனவே தங்களால் இயன்ற 1$ இலிருந்து மேற்பட்ட தொகையை அழித்து எமது முயற்சிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு மிகவும் அன்புடன் கேட்டு நிற்கின்றோம்!

கீழ் வரும் இணைப்பின் மூலம் தொடரவும்!


நன்றி
Pursuit குழுமம்

0 comments: